ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருக்கிறது. தியேட்டர்களை கடந்த மாதத்திலிருந்தே மூடிவிட்டனர். இந்நிலையில் கடந்த மாதக் கடைசியிலும் இந்த மாதத்திலும் வெளியாக இருந்த படங்களின் நிலைமை தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனால் பல படங்கள் மீண்டும் ஓடிடி நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளன.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஆகிய படங்களையும் ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனாலும், அவற்றை அப்படி வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறதாம். இப்படங்களுக்கான சாட்டிலைட் உரிமைகளை விற்கும் போது, தியேட்டரில் வெளியிட்ட பிறகு படத்தை டிவியில் ஒளிபரப்பு செய்வதற்காகத்தான் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.
தற்போது ஓடிடி வெளியீடு என்பதால் அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமாம். அதனால் தான் இந்தப் படங்களுக்கான ஓடிடி பற்றிய தகவல்கள் வந்தும் அவைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்தப் பெரிய படங்களைப் போலவே மேலும் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள். ஆனால் அவையும் இதுபோன்று சிக்கலில் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் தியேட்டர்களைத் திறக்க இன்னும் இரண்டு, மூன்று மாத காலம் ஆகும் என்கிறார்கள். அதனால், அதற்குள்ளாக பத்து, பதினைந்திற்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.




