பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
தமிழ்நாட்டில் புதிய அரசு இன்னும் இரண்டு நாட்களில் பதவியேற்க உள்ளது. அதற்குள்ளாக பல்வேறு துறையினரும் அவர்களது துறைக்காக பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் நீண்ட நாட்களாகவே பல கோரிக்கைகளை அரசுக்கு வைத்து வருகின்றனர். அதிலும் கடந்த ஓராண்டு காலமாக கொரானோ தொற்றால் சினிமா தியேட்டர்கள் பல மாதங்களாக மூடியே இருந்தன. சில மாதங்கள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கைளை வைத்துள்ளார்கள். அது பற்றி பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “கொரானோ பிரச்சினையால் பல மாநிலங்களில், சொத்து வரி, தொழில் வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்துள்ளார்கள். அது போல தமிழ்நாட்டிலும் செய்தால் நன்றியுடையவர்களாக இருப்போம். மேலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 8 சதவீத உள்ளாட்சி வரி இருக்கிறது, அதையும் நீக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு பதவியில் இருந்த அரசு தியேட்டர்காரர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளார்கள்.
ஒரே நேரத்தில் தியேட்டர்காரர்களின் இத்தனை கோரிக்கைகளையும் புதிய அரசு நிறைவேற்றுமா என்பது விரைவில் தெரிய வரும்.