தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
தமிழில் கேடி என்ற படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதோடு, தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்திருக்கும் இலியானா, ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு காதலருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
ஒருகட்டத்தில் இலியானா கர்ப்பமாகி, கருவை கலைத்து விட்டதாகவும், அதையடுத்து காதலரை பிரிந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும் பலதரப்பட்ட செய்திகள் மீடியாக்களில் பற்றி எரிந்தன.இந்நிலையில் இதுபோன்ற செய்திகளுக்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார் இலியானா.அதில், நான் கர்ப்பமாக இருந்தேன், கருக்கலைத் தேன் என்று வெளியான செய்திகள் வெளியானதை அறியும்போது வருத்தமாக இருக்கிறது. அதோடு, நான் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
நான் எதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். அதற்கான அவசியமே இல்லை. இதுபோன்ற செய்திகளை யார் எதற்காக பரப்பி விடுகிறார்கள் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ள இலியானா, என்னைப்பற்றி வெளியான இதுபோன்ற செய்திகள் அனைத்தும் அப்பட்டமான வதந்தியே. இதில் துளிகூட உண்மை கிடையாது என்று அந்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார் இலியானா.