ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து மூன்று முக்கிய சினிமா பிரபலங்கள் மறைந்தது ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்(61), இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விவேக் (59), இன்று இயக்குனர் கே.வி.ஆனந்த் (54) ஆகியோரது திடீர் மரணம் யாருமே எதிர்பார்க்காதவையாக அமைந்துவிட்டது.
இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த் இருவருமே சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தால் அதில் சமூகக் கருத்துக்களையும் பதிவிடும் விதத்தில்தான் படங்களை இயக்கியிருக்கிறார்கள். நடிகர் விவேக் அவருடைய படங்களில் சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை தனது நகைச்சுவை வசனங்களின் மூலம் பதிய வைத்துள்ளார்.
50 வயதிலிருந்து 60 வயதில் அவர்களுடைய மரணம் நிகழ்ந்தது அதிர்ச்சியானதுதான். இன்னும் பல வருடங்கள் அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதைப் பார்க்கிறோம்.
இவர்களின் மறைவு தமிழ் சினிமா உலகத்தையும் தாண்டி மற்ற மொழிக் கலைஞர்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.