Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிறைவேறாமல் போன 'கோ' குழுவினரின் ஆசை

30 ஏப், 2021 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Karthika-shocks-over-KV-Anand-dead-:-Ko-teams-desire-unfulfilled

திடீரென மாரடைப்பால் இன்று மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக் ஆகியோரது அகால மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது போலவே இவரது மரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'கோ' ஒரு முக்கியமான படம். ஒரு பரபரப்பான அரசியல் படமாக பத்து வருடங்களுக்கு முன்பு 2011ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியன்று இப்படம் வெளியானது. பத்து வருடத்தை நினைவு கூறும் வகையில் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கார்த்திகா நாயர் கடந்த வாரம் 'கோ' படப்பிடிப்புப் புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டு நினைவு கூர்ந்திருந்தார்.

அந்தப் புகைப்படங்களில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இல்லை. அதனால், 'நான் எங்கே ?' என கார்த்திகாவின் டுவீட்டில் கமெண்ட் போட்டிருந்தார். அதற்கு கார்த்திகா, “நாம் ஒரு ரியூனியன் நடத்தி நிறைய புகைப்படங்கள் எடுப்போம்” என பதிலளித்திருந்தார்.

இந்த சுவாரசியமான டுவிட்டர் பதிவுகள் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் கே.வி.ஆனந்த் மறைவு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

“இது பொய்யான செய்தி என யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ், இதை நம்ப குழப்பமாக இருக்கிறது,” என கே.வி.ஆனந்த் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கார்த்திகா.

கே.வி.ஆனந்த் இயக்கிய படங்களில் பணியாற்றிய பிரபலங்களுக்கு அவரது மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மூத்த குணசித்திர நடிகர் செல்லதுரை காலமானார்மூத்த குணசித்திர நடிகர் செல்லதுரை ... தொடர் மரணங்கள் : அதிர்ச்சியில் தமிழ் சினிமா தொடர் மரணங்கள் : அதிர்ச்சியில் தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
30 ஏப், 2021 - 14:17 Report Abuse
LAX சென்றவாரம் இப்படியொரு சந்தோஷமான கருத்துப்பரிமாற்றம் நடந்துள்ள நிலையில், Re-Union/PhotoShoot ஐ எதிர்பார்த்திருந்த கார்த்திகாவுக்கு, உண்மையாகவே இது மிகப்பெரிய அதிர்ச்சிதான்.. அதை நன்றாகவே உணர முடிகிறது.. கடவுளே.. 🙏🏽
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in