Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீர்வு ஏற்படாத ‛இந்தியன் 2 பிரச்னை : கமல் சமரசம் செய்வாரா?

29 ஏப், 2021 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Will-Kamal-solve-the-Indian-2-issue?

சென்னை: இந்தியன் 2 படத்தை முடிப்பது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் தரப்பு இடையே நடந்த சமரச பேச்சு தோல்வி அடைந்து விட்டதாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னையை தீர்க்க கமல் முன்வருவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கமல் நடிக்கும், இந்தியன் -2 படத்தை முடித்து கொடுக்காமல், வேறு படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, படத் தயாரிப்பு நிறுவனமான லைகா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசாரணைக்கு வந்தது. இரு தரப்பும் கலந்து பேசி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும்படி, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஏப்., 24ல் பேச்சு நடந்தது. ஜூன் முதல் அக்டோபருக்குள் படத்தை முடித்து கொடுத்து விடுவதாக, இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை, தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை. ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க, தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியதால், பேச்சு தோல்வி அடைந்தது. எனவே, வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணையை, ஜூன் மாதத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தது.

கமல் சமரசம் செய்வாரா
இந்தியன் 2 படம் ஏதோ ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்குமான பிரச்னை என்று மட்டும் ஏற்க முடியாது. அப்படியே அவர்கள் இருவர் தரப்பு பிரச்னை என்றாலும் படத்தின் ஹீரோவான கமல், இந்த விஷயத்தில் மவுனமாய் இருப்பது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கமல் இன்று, நேற்று சினிமாவிற்கு வந்தவர் அல்ல, தமிழ் சினிமாவே கொண்டாடிய நடிகர்களில் ஒருவர். நடிகர் மட்டுமல்லாது, இயக்குனர், தயாரிப்பாளரும் கூட. ஆகவே அவர்களின் நிலை என்னவென்று உணர்ந்தவர்.

மேலும் இது தனது படம் என்பதால் கமலே, இதில் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே லைகா நிறுவனத்தில் அவர் நடித்த சபாஷ் நாயுடு படம் பாதி வளர்ந்த நிலையில் டிராப் ஆனது. அடுத்து இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் என இந்நிறுவனத்திற்கு அடுத்தடுத்து படங்களில் இவர் நடிக்கிறார். ஆகவே அதை உணர்ந்து கமல் இப்பிரச்னையில் தலையிட்டு இந்தியன் 2 படத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'வலிமை' அப்டேட்டுக்குப் பதில் டிரெண்டாகும் 'அஜித் 61' அப்டேட்'வலிமை' அப்டேட்டுக்குப் பதில் ... 15 ஆண்டுகள் கழித்து 'பைக்' ஓட்டிய மம்தா 15 ஆண்டுகள் கழித்து 'பைக்' ஓட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

M Ramachandran - Chennai,இந்தியா
29 ஏப், 2021 - 19:04 Report Abuse
M Ramachandran இந்த ஆள் அரசியில் மற்றும் ஊருக்கு உபதேசம் செய்வார் ஆனால் சினிமா இண்டஸ்ட்ரியிலும் வாழ்க்கையிலும் மாக மோச மனா கேரெக்டர்.
Rate this:
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
29 ஏப், 2021 - 16:53 Report Abuse
Dhanraj Jayachandren Iyakaunarum, thayaripalarum seri raal Kamal nadika ready. avargal iruvarudam etho orechanai ullathu. ithil Kamal seiya ethuvum.illai..
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
29 ஏப், 2021 - 15:28 Report Abuse
Vena Suna இந்த சின்ன பிரச்சினையை தீர்க்க முடியாத கமல் எப்படி முதல்வர் ஆக ஆசைப்படுகின்றார்?
Rate this:
29 ஏப், 2021 - 14:35 Report Abuse
chandran, pudhucherry . சபாஷ் அய்யர்
Rate this:
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
29 ஏப், 2021 - 14:08 Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN திரு. கமல்ஹாசன் அவர்கள் மக்கள் பணி யே மகேசன் பணி என்று மக்கள் நலன் சிரமேற்கொண்டு கோவையில் எம்எல்ஏ தேர்தலில் நின்றதால் 300 கோடி இழப்பு ஏற்பட்டதாக பரபரப்புரையில் கூறியிருந்தார். ஆகவே திரை உலகினர் அந்த 300 கோடி இழப்பை ஈடு கட்டுவதாக இருந்தால் இந்தியன் 2 பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள். இல்லை என்றால் மற்ற கட்சிகளுடன் சேர்த்து தானும் மோடியை திட்ட கிளம்பி விடுவார்கள். டும் டும் டும் ..... டும் டும் டும் .......
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in