அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' |

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இந்தப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளார்.
அதுமட்டுமல்ல, 'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது. இந்தப்படத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட கவுரவ வேடத்தில் சூர்யாவும் நடிக்கிறாராம். இதில் ஆதிவாசி இன மக்களின் பிரச்சனைக்கு ஆதரவாக போராடும் வழக்கறிஞராக சூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.




