டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மீனா. 90களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுக்கு 1990ல் வெளிவந்த தமிழ்ப் படமான 'ஒரு புதிய கதை' படம்தான் முதல் படம். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அடுத்து அவர் கதாநாயகியாக ராஜ்கிரணுடன் இணைந்து நடித்த 'என் ராசாவின் மனசிலே' படம்தான் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.
கஸ்தூரிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த அந்தப் படம் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம். அந்தப் படம் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படம் பற்றி இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார் மீனா.
“1991ம் வருடம் ஏப்ரல் 13ம் தேதி வெளியான 'என் ராசாவின் மனசிலே' படம் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ராஜ்கிரண், கஸ்தூரிராஜா, இளையராஜா சார் ஆகியோருக்கு மிக்க நன்றி. என்னுடைய முதல் சூப்பர் ஹிட் பாட்டு 'குயில்பாட்டு'. ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வு, நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.