பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு |

அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயராகும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா ஹீரோயின். பகத் பாசில் வில்லன். இவர்கள் தவிர ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுகுமார் இயக்குகிறார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ரசிகர்களுடன் வீடியோ சாட்டில் பேசினார் ராஷ்மிகா. அப்போது அவர் கூறியதாவது: புஷ்பா மிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது. மும்முரமாக, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன, படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சுகுமார் இயக்கம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜுன் கதாநாயகன். இதை விட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு?. என்றார். அல்லு அர்ஜூன் எப்படிபட்டவர் உங்கள் அனுபவம் எப்படி என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அல்லு அர்ஜூன் மிகவும் எளிமையானவர், இனிமையானவர்" என்றார்.
இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்துள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.