ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவில் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு பெப்சி தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் வெளியூர்களில் வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த நாளுக்குரிய சம்பளத்தையும், பேட்டாவையும் வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள வழக்கம்.
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் பல படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரங்கு, உரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல். இவற்றால் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
இதனால் படப்பிடிப்பு நடக்காத நாட்களில் பெப்சி ஊழியர்களுக்கு எங்களால் சம்பளம் வழங்க இயலவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்றுக் கொண்ட பெப்சி வேலை இல்லாத நாட்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து சம்பளம் பெற வேண்டாம் என்று அனைத்து திரைப்பட சங்கங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.