2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தற்போதுவரை, தொடர்ந்து பிசியான கதாநாயகியாகவே வலம் வரும் மம்தா, தற்போது மலையாளத்தில் பிரித்விராஜுடன் இணைந்து அந்தாதுன் ரீமேக்கில் நடித்து வருகிறார். அதேபோல தமிழில் சிவப்பதிகாரம் படத்திற்கு பிறகு, 15 வருடங்கள் கழித்து, தற்போது விஷாலுடன் மீண்டும் எனிமி படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கிலும் லால்பாக் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ். இதற்கு முன்னதாக நாகார்ஜுனாவுடன் இணைந்து 11 வருடங்களுக்கு முன் தெலுங்கில் 'கேடி' என்கிற படத்தில் நடித்திருந்த மம்தா, நீண்ட இடைவெளிக்கு பின் தெலுங்கில் நுழைந்துள்ளார். இந்தப்படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.