டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவரும் சில தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த வருடம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
சஞ்சனா கல்ராணிக்கும் டாக்டர் அசிஸ் பாஷா என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. அப்போதெல்லாம் தனக்குத் திருமணமாகவில்லை என்று தெரிவித்தார் சஞ்சனா. ஆனால், அவருடைய அம்மா தன்னுடைய மகள் சஞ்சனாவுக்கும் அசிஸ் பாஷாவுக்கும் மூன்றரை வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடந்ததாகவும், அவர்கள் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்பின் சஞ்சனா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போது அவருடைய திருமண விவகாரம், முஸ்லிம் மதத்திற்கு அவர் மாறியது உள்ளிட்டவைகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் நடந்தது பற்றி பேசியுள்ளார் சஞ்சனா. அவருக்கும் அசிஸ் பாஷாவுக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கம் இருந்ததாம். கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும், அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.




