குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
அடங்கமறு, அயோக்யா படங்களில் கதாநாயகியாக நடித்த ராஷி கண்ணா தற்போது தெலுங்கில் நாகசைதன்யா ஜோடியாக 'தேங்க்யூ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். நாகசைதன்யாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. விக்ரம் குமார் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் உள்ள மிலன் மற்றும் டூரின் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் பலரும் தங்களது படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி வருகின்றனர்.. ஆனால் ராஷி கண்ணாவோ, “இங்கே கொரோனா பரவல் அவ்வளவாக இல்லை.. மக்கள் வழக்கம்போல சர்வ சாதாரணமாக நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்.. நாங்கள் சிறிய அளவிலான படக்குழு என்றாலும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.
கடந்தமுறை கொரோனா முதல் அலையில் சீனாவுக்கு அடுத்ததாக மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், தற்போது அந்த அளவுக்கு கொரோனா தாக்கம் இல்லை என ராஷி கண்ணா குறிப்பிட்டுள்ளது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.