பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
ஆக்ஷன் என்ற படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு இல்லாத தமன்னா, நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் நான்கு படங்களை கைவசம் வைத்திருப்பவர், கோபிசந்துடன் நடித்துள்ள சீடிமார் என்ற படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்.
காரணம், இந்த படத்தில் தெலுங்கானாவின் கபடி பயிற்சியாளர் ஜுவாலா வேடத்தில் நடித்துள்ள தமன்னா இதற்காக முறையான கபடி பயிற்சி எடுத்து நடித்துள்ளார். இந்நிலையில், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ள இப்படத்தில் தனக்கு கிடைத்துள்ள அழுத்தமான வேடம் தன்னை பெரிய அளவில் பேச வைக்கும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள தமன்னா, இதன்பிறகு வழக்கமான நாயகியாக இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தனக்கு கிடைக்கும் என்று தெரிவித்திருப்பவர்,தற்போது சீடிமார் படத்தின் ரிலீசுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.