Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிகரெட் பிடிக்க கற்றுக் கொடுத்ததா 'பிக்பாஸ்'

24 ஏப், 2021 - 17:23 IST
எழுத்தின் அளவு:
Is-Biggboss-teach-to-smoke

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்திருக்கிறது. நிகழ்ச்சியில் இருக்கும் பிரச்சினைகள், சண்டைகள் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்த விஷயங்களாக அமைந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில பெண் போட்டியாளர்களின் கிளாமரான ஆடை, மற்றும் சில அத்து மீறல்கள் அந்த நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்படுபவையாகவும் இருந்துள்ளன.

இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான வீடு போன்ற அரங்கில் சிகரெட் பிடிப்பவர்களுக்காக ஒரு சிறிய கூண்டு போன்று அமைக்கப்பட்ட தனி பகுதி ஒன்று உண்டு. முதல் இரண்டு சீசன்களில் அந்தப் பகுதியை அடிக்கடி காட்டுவார்கள். ஆனால், கடந்த சீசனில் அந்தப் பகுதிக்குள் நடந்த உரையாடல்களைக் காட்டுவதைத் தவிர்த்துவிட்டார்கள்.

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் ஆகியவை வரும் போது எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறும். டிவிக்களில் பெரும்பாலும் அப்படியான காட்சிகள் டிவி தொடர்களிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் கூட இடம் பெறாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிகரெட் பிடிப்பவர்களை ஆதரிக்கும் விதத்தில் அவர்களுக்கென ஒரு தனி பகுதியை ஒதுக்குவது விமர்சனத்துக்குரிய ஒன்றாகும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களில் சிலர் சிகரெட் பிடிக்கம் பழக்கம் கொண்டவர்கள் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால், இதுவரை சிகரெட் பிடிக்காதே ஒரு பெண் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

அது பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது : பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம் பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள்.

அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, "தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்கம் போயி.. " என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.

நான் "ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.. feel free" என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் "Soooooory.." என்று நெளிந்தாள்.

"எதுக்கு?" என்றேன்.

"உங்களுக்கு ஷாக்தானே?"

"அதிர்ச்சி இல்ல.. ஆனால் ஆச்சர்யமாக உள்ளது. நீங்கள் புகைப்பது தெரியாது" என்றேன்.

"எல்லாம் இந்த பிக்பாஸ்-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா?" என்றாள்.

"அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டேன்.

"ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்"

"இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?"

"நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது" என்றாள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஜுன் மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. வரும் புதிய சீசனிலாவது சிகரெட் பிடிப்பதற்கான தனி அறை பகுதியை நீக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

கோடை காலத்தில் நிகழ்ச்சி நடந்த போது நீச்சல் குளத்திற்குள் தண்ணீர் விட வேண்டாமென யோசித்த கமல்ஹாசன், இந்த சிகரெட் பிடிக்கும் பகுதியும் வேண்டாமென யோசிப்பாரா ?.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தன் புகைப்படத்தைத் தானே கிண்டலடித்த ராதிகாதன் புகைப்படத்தைத் தானே கிண்டலடித்த ... சென்னையில் படப்பிடிப்பைத் தொடருமா விஜய் 65 குழு? சென்னையில் படப்பிடிப்பைத் தொடருமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
27 ஏப், 2021 - 07:11 Report Abuse
N Annamalai விஜய் டிவி யின் உள் நோக்கம் நமது சமுதாயத்தை சீரழிப்பது .பணம் ஒன்றை காட்டி மூளை சலவை செய்கிறார்கள் .சன் டிவி பரவாயில்லை என நான் நினைக்கிறன் .இந்த நிகழ்ச்சியே ஒரு முன் ஏற்பாடுதான் திட்டம் போட்டு நம்மை நம் கலாச்சாரத்தை அழிப்பது தான் .சிகரெட் இருப்பது போல் தண்ணியும் வைக்கலாம் .
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
26 ஏப், 2021 - 16:02 Report Abuse
Sridhar பாலியல் தொல்லை பெரிய குற்றமா சிகரெட் குடிப்பது பெரிய குற்றமான்னு ஒரு பட்டிமன்றம் வைக்கலாம். அதுல யார் ஜெயிச்சாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தண்டம்ங்கற உண்மை மாறாது.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
26 ஏப், 2021 - 05:02 Report Abuse
Sathish பிக் பாஸ் பார்த்து தான் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கைய சீரமைத்துக் கொள்கிறார்கள். பெத்த அம்மா அப்பா சொன்னா மண்டையில ஏறாது பல பேருக்கு. அவங்க இந்த நிகழ்ச்சியை பார்த்து திருந்துறாங்க. அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. அட உண்மையைத்தான் சொல்றேன்.
Rate this:
பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
25 ஏப், 2021 - 18:45 Report Abuse
பிஞ்சதலையன் அதெல்லாம் சரி அன்னான் சேம்ஸ் பொஞ்சாதியோட சண்டை போட்டு 2 நாள் உள்ளாரா இருந்து வந்ததா செய்தி சொல்லுது 2017 வருஷம் பெயில்லே இப்போ பொகை புடிக்கறதை பத்தி பாடம் எடுக்கறார் இங்க சினிமாவுல எல்லாமே நடிப்புடா சாமி அங்கன என் சொந்தம் டுமிழன் சினிமாக்காரன் சுட்அவுட்க்கு பால் ஊத்தறான் பொறந்தநாளுக்கு இவன் இனிப்பு குடுக்கறான்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25 ஏப், 2021 - 00:27 Report Abuse
Mirthika Sathiamoorthi கல்லூரி படிப்பின்போது தண்ணியடிக்க பழகுனா காலேஜை குத்தம் சொல்லுவோமா? புகை பிடிக்கும் இடம்ன்னு தனியா கம்பெனியில வச்சிருப்பானுக..அப்போ அவனெல்லாம் சிகரெட் கத்துகுடுக்கிறானா? ஐயோ ஐயோ.... எங்க கும்பல்ல சிலர் புதிதாய் தண்ணி அடிக்க கத்துக்கிட்டாலும் தண்ணியே அடிக்காத ஒருத்தன் இருந்தான் எப்பவும் குளிர்பானம்தான். பப்புக்கு போனா அவன் ஒருதந்தாங்க எல்ல உணவுப் பதார்தங்களையும் ரசிச்சு சாப்புடுவான்..சரக்கடிச்சு நாவில் அதுமட்டுமே இருக்க சாப்பிடும் உணவின் சுவையே தெரியாது. விலைக்குடுத்து வாங்கினவுணவு அவன் ஒருவன் மட்டும் ரவுண்டு கட்டி எல்லாத்தையும் ருசிபாப்பான்..பலசமயம் பொறாமையா இருக்கும் அவனை பார்க்கும்போது ...எல்ல நட்பு வட்டாரத்திலும் இப்படிப்பட்ட ஒருஆள் இருப்பான்.. .இங்கு மனக்கட்டுப்பாடு என்பதுதான் முக்கியம்..சிகாரட்டே பிடிக்காத பெண் போட்டியாளர்கள் இல்லையா? சினிமாவில் காட்டாததா? அங்கே கத்துக்காத பழக்கமா? வேணும்னா புகைபிடிப்பது உடல் னால கேடுன்னு கீழே போட்ட போதுமா? காமெடியா இருக்கு.. புதிதாய் ஒரு பழக்கம் பழகுபவரிடம் இது தவாறன் பழக்கம் பழகாதேன்னு தடுக்காம பாத்தவச்சு கொடுத்த அந்த பெண்களை விட்டுட்டு பிக்பாஸை பேசுவது? கமலை குறிவைப்பது? ஏதாவது விளம்பரம் தேட?
Rate this:
enkeyem - sathy,இந்தியா
25 ஏப், 2021 - 12:59Report Abuse
enkeyemபிக் பாஸ் என்கிற நிகழ்ச்சியே ஒரு கலாச்சார சீரழிவு. அதற்கு முட்டுக்கொடுத்து கருத்து போடுவது தேவையற்றது...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25 ஏப், 2021 - 16:51Report Abuse
Mirthika Sathiamoorthiகலாச்சாரம் என்றால் என்னனு முதலில் விளக்குங்கள்...அப்புறம் சீரழிவை பற்றி பேசுவோம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in