'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வரும் ஹீரோக்களுடன் ஸ்ருதிஹாசன் இணைந்தால் அந்த படம் ஹிட் அடித்து விடும். அப்படித்தான் சமீபகாலமாக நடந்து வருகிறது. இதனால் டோலிவுட்டில் அவரை ஹிட் பட நாயகியாக கருதத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் தற்போது பிரபாசுடன் முதன்முறையாக சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இதற்கு முன்பு ரவிதேஜாவுடன் நடித்த கிராக் படத்தில் போலீசாக நடத்தவர், இந்த சலார் படத்தில் தொலைக்காட்சி நிருபராக நடிக்கிறார். அதிலும் சுரங்க தொழிலில் ஊழல் செய்யும் பெரும்புள்ளிகளை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் அரசியல் பத்திரிகையாளர் வேடம்.
அதனால் சலார் படத்தில் பிரபாசுடன் நடிக்க சான்ஸ் கிடைத்ததையே மகிழ்ச்சியாக நினைத்த தனக்கு, இரண்டு பாட்டுக்கு வந்து நடனமாடி விட்டு செல்லும் வழக்கமான நாயகி வேடமாக இல்லாமல்,அழுத்தமான நிருபர் வேடம் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறாராம். அந்த வகையில் சலார் படம் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.