ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
சின்னக்கலைவாணர் என எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று(ஏப்., 17) காலமானார். அவருக்கு திரையுலகினரும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கொரோனா காலம் என்பதையும் தாண்டி பலர் அவருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிஊர்வலத்தின் போது வழிநெடுக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை இன்று(ஏப்., 18) சந்தித்தனர். விவேக்கின் மனைவி அருள்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறுகையில், ‛‛எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி. அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி. இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.