அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பகத் பாசில நடித்துள்ள ஜோஜி படம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது. திலீஷ் போத்தன் இயக்கியுள்ள இப்படம் ஷேக்ஸ்பியரின் 'மெக்பெத்' நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் பகத் பாசிலின் நடிப்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் குணசித்ர நடிகர் கஜராஜ் ராவ், ஜோஜி படத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
சமீபத்தில் நான் ஜோஜி பார்த்தேன். நீங்கள் (மலையாளிகள்) தொடர்ந்து அசலான சிந்தனைகளை, மிக நேர்மையாக திரையில் கொண்டுவந்து நிஜமாகவே நல்ல சினிமா எடுப்பது நியாயமாக இல்லை. மற்ற மாநில மொழித் திரைப்படங்களிலிருந்து, குறிப்பாக எங்கள் இந்தி மொழிப் படங்களிலிருந்து நீங்கள் சுமாரான படங்கள் எடுக்க கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் சொன்ன இந்த விஷயங்களை நீங்கள் மனதில் எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் செய்யும் நல்ல வேலையைத் தொடர்ந்து செய்வீர்கள் என்று நம்புகிறேன். தொற்று இல்லா உலகில் உங்கள் படங்களுக்கு, முதல் நாள் முதல் காட்சிக்கு, கையில் பாப்கார்னோடு நான் எப்போதும் காத்திருப்பேன். வட இந்திய பகத் பாசில் ரசிகர் மன்றத்தின் தலைவர் என்று நானே சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு கஜராஜ் எழுதியுள்ளார்.