மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் |

சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கிய கன்னட படம் யுவரத்னா. இந்த திரைப்படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், புனீத் ராஜ்குமார், சாயீஷா, சோனு கௌடா, தனஞ்சயா, மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கல்வி அமைப்பை தனியார்மயமாக்கும் அரசியல் தொடர்புகளால் மூடப்படும் நிலைக்குச் செல்லும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியைச் சுற்றி யுவராத்னாவின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வர் தனியார் மயமாக்கலுக்கு எதிராகப் போராடுகிறார். ராஷ்ட்ரகுடா பல்கலைக்கழகத்தில் ஒரு பொறியியல் மாணவனாகச் சேரும் அர்ஜூன் அதாவது புனீத் ராஜ்குமார், அவரது இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? அவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி காணுவார்களா? என்பதுதான் படத்தின் கதை.
யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. திரையரங்குளில் வெளியாக நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் ஓடிடியில் வெளியானது கன்னட தியேட்டர் அதிபர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.