ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
மலையாளத்தில் கடந்த வாரம் அனுக்ரகீதன் ஆண்டனி என்கிற படம் வெளியானது. நடிகர் சன்னி வெய்ன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் 96 புகழ் கெளரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் வெற்றியை துல்கர் சல்மானுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் சன்னி வெய்ன்.
துல்கர் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர் தான் இந்த சன்னி வெய்ன். இவரும் தற்போது ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என மாறிமாறி நடித்து வருகிறார். மேலும் துல்கர் சல்மானும் சன்னி வெய்னுக்கு தனது படங்களில் வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். அந்தவகையில் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'குறூப்' என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..