சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் |
தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராஷ்மிகா.
தற்போது விகாஷ் பகத் இயக்கத்தில் ஹிதி படம் ஒன்றில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) ராஷ்மிகாவுக்கு பிறந்த நாள். இதனை அவர் ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே அமிதாப் பச்சனுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு அமிதாப் பச்சன் கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அமிதாப் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 'அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியதுதான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.