அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி'. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை முழுமையாக மூடச் சொல்லியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு புதிய படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. 'தலைவி' படத்தை ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதால் தற்போது ஏப்ரல் 23ம் தேதி மகாராஷ்டிராவில் வெளியிட முடியாது.
தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியிட்டு ஹிந்தி வெளியீட்டைத் தள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்வார்களா என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ராணா டகுபட்டி நடித்த 'காடன்' படத்தையும் தமிழ், தெலுங்கில் வெளியிட்டு, ஹிந்தியில் தள்ளி வைத்துவிட்டனர்.
ஒரு வேளை 'தலைவி' படத்தை ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்தால் தமிழ், தெலுங்கில் ஏப்ரல் 23ம் தேதி வெளியாவது சந்தேகம்தான்.