'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 65வது படத்தில் நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இண்டர்போல் அதிகாரியாக விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்குப்பிறகு ரஷ்யாவில் நடக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு டைரக்டர் நெல்சன் ரஷ்யாவில் லொகேசன் பார்த்து வரும் தகவலையும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் தேர்தலில் ஓட்டளித்து முடித்ததும் ரஷ்யாவிற்கு விஜய் 65ஆவது படக்குழு பறந்து விடும் என்று தான் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது விஜய் 65வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை, கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காகத் தான் ரஷ்யா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்டுடியோவில்தான் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் லெஜன்ட் சரவணன் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.