Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க இப்படி செய்யலாமா?

26 மார், 2021 - 13:59 IST
எழுத்தின் அளவு:
If-theatre-owners-do-this,-people-will-come?

கொரோனா தாக்கத்திற்குப் பிறகு பெரும்பாலான மக்கள் சினிமா தியேட்டர்களையே மறந்துவிட்டார்கள். கடந்த வருடம் கொரோனா தாக்கம் வந்த போது பலரும் ஓடிடி தளங்களில் உறுப்பினர்களாக இணைந்தார்கள். அந்த உறுப்பினர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள புதிய படங்களை நேரடியாகவே தங்கள் தளங்களில் வெளியிடும் முறையை ஓடிடி நிறுவனங்கள் ஆரம்பித்தன. அவற்றின் காரணமாக மக்கள் வீட்டிலேயே நிம்மதியாக படங்களைப் பார்க்கும் முறைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டபின் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் அதிக அளவில் வந்தார்கள். அதனால், படமும் நன்றாக வசூலித்து லாபத்தைக் கொடுத்தது. தற்போது தியேட்டர்கள் பக்கம் வராமல் தவிர்க்கும் ரசிகர்களை மீண்டும் வரவைக்க என்ன செய்யலாம் என திரையுலகினர் சிலரிடம் கேட்டோம். அதில் சிலர் சொன்ன ஆலோசனை சிறப்பாக இருந்தது.

அதாவது ரஜினி படம் என்றாலும் புதிய நடிகரின் படம் என்றாலும், 500 கோடி ரூபாய் படம் என்றாலும் 5 கோடி ரூபாய் படம் என்றாலும் தியேட்டர்களில் ஒரே டிக்கெட் கட்டணம் தான். எனவே, சிறிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைக்கலாம். 150 ரூபாய் கட்டணம் என இருப்பதை 100 ரூபாய், 50 ரூபாய் என மாற்றினால் ரசிகர்கள் வரலாம்.

அதோடு இன்னமும் சில தியேட்டர்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் திண்பண்டங்களை அரசின் உதவியோடு தடுக்கலாம். எந்த பில்லும் கொடுக்கப்படாமல் விற்கப்படும் அவற்றை முறைப்படுத்தி பில்லுடன் மட்டுமே விற்க வைக்க வேண்டும். இந்த இரண்டு மாற்றங்களைச் செய்தாலே போதும் ரசிகர்கள் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்கிறார்கள்.

ஓடிடியில் மூழ்கிக் கிடக்கும் மக்களை ஏதாவது செய்து வரவழைத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் ஒன்றன்பின் ஒன்றாக தியேட்டர்களை மூடும் நிலை ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மஞ்சு வாரியரா இது : ஆச்சரிய போட்டோமஞ்சு வாரியரா இது : ஆச்சரிய போட்டோ திகில் படத்தில் ஷீலா ராஜ்குமார் திகில் படத்தில் ஷீலா ராஜ்குமார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Santi -  ( Posted via: Dinamalar Android App )
27 மார், 2021 - 07:12 Report Abuse
Santi நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்... மூடியே வையுங்க
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
27 மார், 2021 - 20:00Report Abuse
AarkayExactly நிம்மதியாய் இருக்கிறோம். எங்களை இப்படியே விட்டுவிடுங்கள். நண்டு, சுண்டெல்லாம் ஹீரோவென நம்பவைக்க ஒரு பில்டப் இன்ட்ரோ சீன், சுற்றியும் மொக்கையைவிட மொக்கையாய் ஒரு நண்பர் கூட்டம், காலேஜ் student-இன் தாத்தா வயதானாலும் இன்னும் கல்லூரி செல்லும் கிழங்கள், பத்து மாமிச பிண்டங்களை பூ என சுண்டுவிரலால் பந்தாடும் டிபி வந்த ஹீரோ, போறும்டா சாமி இந்தக்கொடுமையை பார்க்க எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வேட்டு வேண்டவே வேண்டாம் இனி சினிமா...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
27 மார், 2021 - 20:10Report Abuse
AarkayExactly நீங்க அடிச்ச கூத்தெல்லாம் போறும் சுரண்டினதெல்லாம் போறும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in