அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் |
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு பெரும்பாலான மக்கள் சினிமா தியேட்டர்களையே மறந்துவிட்டார்கள். கடந்த வருடம் கொரோனா தாக்கம் வந்த போது பலரும் ஓடிடி தளங்களில் உறுப்பினர்களாக இணைந்தார்கள். அந்த உறுப்பினர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள புதிய படங்களை நேரடியாகவே தங்கள் தளங்களில் வெளியிடும் முறையை ஓடிடி நிறுவனங்கள் ஆரம்பித்தன. அவற்றின் காரணமாக மக்கள் வீட்டிலேயே நிம்மதியாக படங்களைப் பார்க்கும் முறைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டபின் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் அதிக அளவில் வந்தார்கள். அதனால், படமும் நன்றாக வசூலித்து லாபத்தைக் கொடுத்தது. தற்போது தியேட்டர்கள் பக்கம் வராமல் தவிர்க்கும் ரசிகர்களை மீண்டும் வரவைக்க என்ன செய்யலாம் என திரையுலகினர் சிலரிடம் கேட்டோம். அதில் சிலர் சொன்ன ஆலோசனை சிறப்பாக இருந்தது.
அதாவது ரஜினி படம் என்றாலும் புதிய நடிகரின் படம் என்றாலும், 500 கோடி ரூபாய் படம் என்றாலும் 5 கோடி ரூபாய் படம் என்றாலும் தியேட்டர்களில் ஒரே டிக்கெட் கட்டணம் தான். எனவே, சிறிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைக்கலாம். 150 ரூபாய் கட்டணம் என இருப்பதை 100 ரூபாய், 50 ரூபாய் என மாற்றினால் ரசிகர்கள் வரலாம்.
அதோடு இன்னமும் சில தியேட்டர்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் திண்பண்டங்களை அரசின் உதவியோடு தடுக்கலாம். எந்த பில்லும் கொடுக்கப்படாமல் விற்கப்படும் அவற்றை முறைப்படுத்தி பில்லுடன் மட்டுமே விற்க வைக்க வேண்டும். இந்த இரண்டு மாற்றங்களைச் செய்தாலே போதும் ரசிகர்கள் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்கிறார்கள்.
ஓடிடியில் மூழ்கிக் கிடக்கும் மக்களை ஏதாவது செய்து வரவழைத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் ஒன்றன்பின் ஒன்றாக தியேட்டர்களை மூடும் நிலை ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.