பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
2021ம் ஆண்டின் மிகப் பெரும் பட்ஜெட் படங்களில் ஒன்றான 'காட்சில்லா Vs காங்' படம் நாளை அமெரிக்கா தவிர உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சுமார் 200 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில், (இந்திய ரூபாயில் 1447 கோடி) உருவாகியுள்ள படம் இது.
இப்படம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது. கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டதில் 'மாஸ்டர்' படத்திற்குத்தான் ரசிகர்கள் அதிகம் வந்தனர்.
இப்போது இப்படத்தைத்தான் தியேட்டர்காரர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எப்படியும் இளம் ரசிகர்கள் இந்தப் படத்தை வந்து பார்ப்பார்கள் என தியேட்டர்காரர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் எதிர்பார்த்தபடி ஓடாத காரணத்தால் இப்படம் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் வெளியாகிறது.
ஆடம் வின்கார்ட் இயக்கியுள்ள இப்படத்தில் அலெக்சாண்டர் ஸ்கர்கிலார்ட், மில்லி பாபி பிரௌன், ரெபக்கா ஹால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.