''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் , சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. இதில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதற்காக வெற்றி மாறனுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து தாணு வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய விருது கிடைத்தது பற்றி வெற்றிமாறன் கூறியிருப்பதாவது: தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கும். எப்போதுமே படம் இயக்கும்போது விருதுகளுக்காக இயக்குவதில்லை. அந்தப் படத்தின் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வழங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். இந்த விருதையும் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
அசுரன் சமூக நீதிக்கான கதை, அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்பது தான் முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிகரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிக முக்கியமானது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் பெற்றிருப்பதிலும் மகிழ்ச்சி. 35 வயது நடிகர், 50 வயது கேரக்டரில் நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை ரொம்ப இலகுவாக நடித்தது ரொம்பவே ஸ்பெஷலான விஷயம். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.