ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாவகரத்து செய்து விட்டார். தற்போது பிரபல சர்வதேச பேட்மிட்டன் வீராங்கணை ஜூவாலா கட்டாவை தீவிரமாக காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். அதோடு ஜூவாலா கட்டாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆர்வமாக இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது. இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை. ஜூவாலா கட்டாவுடன் இருப்பது காதல் அல்ல, பரஸ்பர மரியாதைதான். எனது நலனின் அவரும், அவர் நலனில் நானும் அக்கறையுடன் இருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பேன். அவர் விளையாடுவார். அவரது பேட்மிட்டன் அகாடமியை தொடர்ந்து நடத்துவார்.
ஜூவாலா கட்டா தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறியிருக்கிறார். அதில் அவர் சந்தித்த சவால்கள், அவமானங்கள், விமர்சனங்கள் அனைத்தையும் சொன்னார். அதில் ஒரு சினிமாவுக்கான விஷயங்கள் இருக்கிறது. அதை நான் திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். இதற்கு நிறைய பணம் வேண்டும் உங்களிடம் இருக்கிறதா என்று அவர் கேட்டார். அந்த பணத்தை நான் சம்பாதித்து விட்டு தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். இப்போது எனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறேன். இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க இருக்கிறேன். என்றார்.