மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? |

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளில் சில திரையுலகினர் போட்டியிடுகிறார்கள்.
திமுக சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி (ஆயிரம் விளக்கு தொகுதி), தயாரிப்பாளர் அம்பேத்குமார் (வந்தவாசி), ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு நடிகர், தயாரிப்பாளர். அவரது கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா (மைலாப்பூர்), பாடலாசிரியர் சினேகன் (விருகம்பாக்கம்), தயாரிப்பாளர், பிஆர்ஓ பி.டி.செல்வக்குமார் (கன்னியாகுமரி) கமல்ஹாசன் (கோவை தெற்கு) போட்டியிடுகிறார்கள்.
அதிமுக சார்பில் திரையுலகினர் யாரும் போட்டியிடவில்லை. ஆனால், அவர்களது கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் நடிகை குஷ்பு (ஆயிரம் விளக்கு) போட்டியிடுகிறார்.
தேமுதிக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் நடிகர் ராஜேந்திரநாத் போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.