சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை |
கொரோனா ஊரடங்கு கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட போது தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் காரணமாக புதிய படங்களை வெளியிட ஓடிடி தளங்கள் முன்வந்து அதன்படி சில படங்களை வெளியிட்டன. சூர்யா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளிவந்த காரணத்தால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ஒரு வருடத்திற்கான சந்தா தொகை 400, 1000 ரூபாய் என இருந்ததால் பல நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அதைச் செலுத்தினர்.
ஓடிடி தளங்களில் படங்களைப் பார்க்கப் பழகிய பிறகு அந்த நடுத்தர மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவது குறைந்துவிட்டது. இதைக் கடந்த ஐந்து மாதங்களாக தியேட்டர்காரர்கள் நன்றாகவே உணர்ந்து வருகிறார்கள்.
மக்களை தியேட்டர்களுக்கு வரவழைத்த 'மாஸ்டர்' படத்தை வெளியான 16 நாட்களுக்குள் ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் வெளியான 'பாரிஸ் ஜெயராஜ், சங்கத்தலைவன்' உள்ளிட்ட சில படங்களும் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் 'டெடி' படம் வெளியானது. விரைவில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் வெளியாக உள்ளது. மேலும், சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, 'கர்ணன், சுல்தான்' உள்ளிட்ட சில படங்களையும் அப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நான்கைந்து வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தியேட்டர்காரர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு தான் அவற்றை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என தியேட்டர்கள் தரப்பில் கோரிக்கை வைத்திருந்தார்கள். சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அதை 30 நாட்களாகக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
முன்னணி நடிகர்களின் அதி தீவிர ரசிகர்கள்தான் படம் வெளியானதுமே பார்க்க ஆசைப்படுவார்கள். மற்றவர்கள் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பார்கள். அப்படியானவர்களுக்கு ஓடிடி தளங்களே போதுமானது. இதனால், அவர்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது கேள்விக்குறிதான்.
இந்த புதிய சிக்கலை தியேட்டர்காரர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு அடுத்த சவாலாக அமைந்துள்ளது.