கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக கருதப்படுகிறவர் பாலா. தனித்துவமான தனது படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர். ஆனால் 18 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பிதாமகன் படத்திற்கு பிறகு முழுமையான வெற்றியை அவர் பெறவில்லை.
நான் கடவுள், பரதேசி படங்கள் பாராட்டுகளை பெற்றபோதும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவிய படங்கள். அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் படங்கள் தோல்வியை சந்தித்த படங்கள். கடைசியாக தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தை விக்ரம் மகன் துருவ் நடிக்க வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
அது விக்ரமிற்கே பிடிக்காமல் வேறு டைரக்டரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுத்து வெளியிட்டார். பாலா இயக்கிய வர்மா படத்தை தயாரிப்பாளர் ஓடிடி தளத்தில் வெளியிட்டார். பாலாவுக்கு என்னாச்சு? என்ற விமர்சனம் தான் அந்த படத்திற்கு கிடைத்தது.
இப்படி படிப்படியாக சரிந்த தன் செல்வாக்கை சரிக்கட்ட முன்னணி நடிகர்களை வைத்து அடுத்து ஒரு படம் இயக்க முயற்சித்தார். ஆனால் அவரால் வளர்ந்த நடிகர்களே அவரை தவிர்த்தார்கள். இதனால் தற்போது பாலா ஓடிடி தளத்திற்கு படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக அவர் படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.