மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் |
2020ம் ஆண்டின் முக்கால்வாசி நாட்கள் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டதால் சினிமா உலகம் நிறையவே பாதிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு வந்ததுமே படங்கள் வழக்கம் போல வாரத்திற்கு நான்கைந்தாக வெளிவர ஆரம்பித்தன.
ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. இந்த வருடத்தில் இதுவரை வந்த பெரிய நடிகரின் படமென்றால் 'மாஸ்டர்' படத்தை மட்டும்தான் சொல்லலாம். அந்தப் படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் லாபத்தைத் தரவில்லை என்பதுதான் உண்மையும் கூட.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல நான்கைந்து புதிய படங்கள் வெளியாகியுள்ளன. இன்று வெளியாகியுள்ள “காதம்பரி, மீண்டும் யாத்ரா, மைக்கேல்பட்டி ராஜா, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, தேன்” ஆகிய படங்கள் அனைத்துமே சிறிய படங்கள்தான்.
இந்தப் படங்களில் எந்தப் படம் சில நாட்களாவது தாக்குப் பிடித்து ஓடும் என்பதுதான் தியேட்டர்காரர்களின் கேள்வியாக உள்ளது. தியேட்டர்காரர்கள் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள 'சுல்தான், கர்ணன்' ஆகிய படங்களைத்தான் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.