ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தென்னிந்திய சினிமா வரலாற்றில் மகத்தான வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள். உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்தது. இரண்டு பாகங்களின் கதைப்படி எல்லாமே நிறைவடைந்து விட்டது. இதனால் 3ம் பாகத்துக்கான ஸ்கோப் இல்லை என்ற கூறப்பட்டு வந்தது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் 3ம் பாகம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் பாகுபலியின் 3ம் பாகத்தை தயாரிக்க கார்பரேட் ஓடிடி தளம் ஒன்று முன்வந்திருக்கிறது. இதற்காக அது 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் ராஜமவுலியிடம் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளது. 9 எபிசோட்களை கொண்ட தொடரா இதனை தயாரிக்க அந்த நிறுவனம் விரும்புகிறது. இதற்கு ராஜமவுலி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் பிசியாக இருக்கும் ராஜமவுலி அந்த பணிகளை முடித்து விட்டு இதில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.