'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் அறிமுகமான சமயத்தில் நடிகர் விஜய்யால் குட்டி அசின் என புகழப்பட்டவர் நடிகை பூர்ணா. தமிழ், மலையாளம் என இரு மொழியிலும் மாறி, மாறி நடித்து வரும் பூர்ணா, தற்போது தமிழில் விசித்திரன் படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்தநிலையில் தெலுங்கில் உருவாகும் 'த்ரிஷ்யம்-2'வில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூர்ணா.
மலையாளத்தில் த்ரிஷ்யம்-2, கடந்த மாதம் வெளியாகி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து வெங்கடேஷ்-மீனா நடிப்பில் தெலுங்கிலும் ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு உடனே வெளியானது. இந்தநிலையில் இன்றுமுதல் துவங்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை பூர்ணா கலந்து கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் வெங்கடேஷுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பூர்ணா.