இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
இந்தியாவில் கொரோனா தாக்கம் ஊடுருவி, கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிவடைய போகிறது. இருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. லேட்டஸ்டாக கொரோனா தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார் தில் படஹ்தில் அறிமுகமாகி, கில்லி, பாபா படங்களின் மூலம் புகழ்பெற்ற வில்லன் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. டில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை செய்துகொண்ட ஆசிஷ் வித்யார்த்தி, தானே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “காய்ச்சலுக்கான அறிகுறி தெரிந்ததால் மருத்துவமனைக்கு சென்றபோது கொரோனா பாசிடிவ் என்பது உறுதியானது. எனக்கு பிடிக்காத ஒரே பாசிடிவ் இதுதான். என்னை சமீபத்தில் சந்தித்த நண்பர்கள் தயவுசெய்து நீங்களும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து, உங்கள் உடல்நலத்தை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.