மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா | பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன்பிறகு மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமூகவலைதளங்களில் மிகத் தீவிரமாக இயக்கக்கூடியவர். இருப்பினும் அவரால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிக்க இயலவில்லை.
இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பெரிய ஹீரோக்கள் என அழைக்கப்படுபவர்களுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை எனில், சம்பந்தப்பட்ட பெண்ணின் திறமைகள் நிராகரிக்கப்படுகின்றன. எங்களுக்கு மாற்றம் வேண்டும், வன்கொடுமையை நிறுத்துங்கள், நாங்கள் ஒருபோதும் சமரசமாக மாட்டோம்", என கொந்தளித்துள்ளார்.
ஏற்கனவே தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்க தன்னை படுக்கைக்கு அழைத்தனர் சிலர் எனக் கூறி பரபரப்பை கிளப்பியவர் ஷாலு. அடிக்கடி தன் சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டும் சர்ச்சையில் சிக்குபவர். இந்த சூழ்நிலையில் திடீரென இப்படி ஒரு பதிவை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.