10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகர் லால். கடந்த சில வருடங்களாகவே தமிழில் நடிக்காமல், இடைவெளி விட்டிருந்த லால், தற்போது தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் பிரபு நடிக்கும் படம் என தனது இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பிஸியாகியுள்ளார்.
நடிகர் லாலின் அடையாளமே அவரது தாடி தான். ஆனால் சமீப நாட்களாக மீசையில்லாமல் மழுமழுவென ஷேவ் செய்த முகத்துடன் தான் காட்சி தருகிறார் லால். ஆனால் தாடியை அவர் தியாகம் செய்ததற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடிக்கும் மலையமான் கதாபாத்திரத்திற்காக பெரிய மீசை, தாடியுடன் நடிக்க வேண்டி இருக்கிறதாம். அதனால் அடிக்கடி செயற்கை தாடி, மீசையை ஒட்டி பிரிப்பதில் வலியுடன் கூடிய சிரமம் ஏற்பட்டதால் தான், தாடியையே தியாகம் செய்து விட்டாராம் லால்.