"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். மனதில்படும் கருத்துக்களை தைரியமாக கூறுகிறவர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலையில் மகாராஷ்டிர மாநில அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் தைரியமாக கூறினார். இதனால் அவரை மும்பைக்குள் விட மாட்டோம் என்று மாநில அரசு எச்சரித்தது. அதையும் மீறி அவர் மும்பைக்குள் வந்தார்.
இந்த பிரச்சினையில் மும்பையில் உள்ள கங்கனாவின் வீட்டை மாநகராட்சி இடித்தது. முறையான அனுமதி இன்றி பராமரிப்பு பணிகளை செய்ததாக மாநகராட்சி குற்றம் சாட்டியது. இதை எதிர்த்து கங்கனா மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் கங்கனா வீட்டை மாநகராட்சி இடித்தது தவறு அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் கங்கனா 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருந்தார். பொறியாளர்கள் இடிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு அதை சரிசெய்ய ஆகும் செலவை மாநகராட்சிக்கு தெரிவித்து அதன்பிறகு நஷ்டஈட்டை வழங்க வேண்டும். ஆனால் கங்கனா வீட்டை மதிப்பீடு செய்ய வரும் கட்டிடகலை பொறியாளர்களை மாநகராட்சி மிரட்டுவதாக கங்கனா குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மும்பை மாநகராட்சி எனது வீட்டை இடித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதற்காக எதிராக நான் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு கட்டிடகலை நிபுணர் மூலம் இழப்பீட்டை மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் எந்த கட்டிடகலை நிபுணரும் இதற்கு முன்வரவில்லை. காரணம், அவர்களின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மாநகராட்சி மிரட்டி வருகிறது. என்று கூறியுள்ளார்.