அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும், "கடல் படத்தில், கவுதம் கார்த்திக், துளசி ஆகியோருடன், பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகள், லட்சுமி மஞ்சுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், இவருக்கு கிராமத்து பெண் வேடம். "படம் வெளியானதும், இவரது நடிப்பு பெரிதும் பேசப்படும் என்கின்றனர், படக் குழுவினர். படத் தயாரிப்பாளர், மாடல், "டிவி தொகுப்பாளினி என, பன்முக திறமையுடன், வலம் வரும், லட்சுமி, "கடல் படம், தன்னுடைய திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என, நம்பிக்கையுடன் உள்ளார். இந்தப் படத்தில், குத்துப் பாடலுக்கு லட்சுமி மஞ்சு ஆடியுள்ளதாக தகவல் வெளியானது. இதைக் கேட்டதும், அவர் கொதித்து விட்டார். "குத்துப்பாடலுக்கெல்லாம் நான் ஆடவில்லை என, மறுப்பு தெரிவித்துள்ளார். "கடல் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு பாடல் மட்டுமே, வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தை பற்றிய, மற்ற விஷயங்களையும், படம், எப்போது வெளியாகும் என்ற தகவலையும், மிகவும் ரகசியமாக வைத்துள்ளார், மணிரத்னம்.