'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மும்பை: பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்சி பன்னு, ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஷிபாசிஷ் சர்கார் ஆகியோருக்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில், கதாநாயகியாக நடிப்பவர் டாப்சி பன்னு, 33. பாலிவுட் சினிமாவின் பரபரப்பான இயக்குனர் என பெயர் பெற்றவர், அனுராக் காஷ்யப், 48.
இவர், 2011ல், பேன்டம் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி, பல்வேறு ஹிந்திப் படங்களை தயாரித்தும், இயக்கியும் வந்தார். இந்த நிறுவனத்தில், பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான விக்ரமாதித்ய மோத்வானே, தயாரிப்பாளர்கள் விகாஸ் பாஹல், மது மான்டேனா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.
இந்த, பேன்டம் பிலிம்ஸ் நிறுவனம், கடந்த, 2018ல் மூடப்பட்டது. அதில் இருந்த அனைவரும் தனித்தனி தயாரிப்பு நிறுவனங்களை துவங்கினர். இந்நிலையில், பேன்டம் பிலிம்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்சி பன்னு, ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷிபாசிஷ் சர்கார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மஹாராஹ்டிராவின் மும்பை மற்றும் புனேவில், இவர்களுக்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சோதனை நடைபெற்றது. மேலும், மும்பையைச் சேர்ந்த, க்வான் என்ற திறமை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் சிலருக்கு சொந்தமான இடங்களிலும், சோதனை நடைபெற்றது. அனுராக் காஷ்யபின் முன்னாள் பங்குதாரரான மது மான்டேனா, இந்த க்வான் நிறுவனத்தை துவக்கினார் என்பதால், சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்சி பன்னு ஆகியோர், விவசாயிகள் போராட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உட்பட, பல்வேறு விவகாரங்களில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.