லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் சிறிய ரக பயணிகள் விமானத்தை உருவாக்கி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவான படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கி இருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ஓடிடியில் வெளியிடப்பட்டாலும் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை ஆஸ்கர் போட்டிக்கான பொது பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட அனுப்பி வைத்தனர்.
தற்போது சூரரைப்போற்று படம் ஆஸ்கர் விருதை நோக்கி ஒருபடி முன்னேறி இருக்கிறது. ஆஸ்கர் விருது போட்டிக்கு இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் இடம்பெற தகுதியான படங்கள் பட்டியலை ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் இடம்பெற்ற 366 படங்கள் வரிசையில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை பிரிவில் சூரரைப்போற்று படம் இடம் பெற்றுள்ளது.
இந்த படங்களுக்கு பார்வையாளர்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையில் விருது அறிவிக்கப்படும். சூரரைப்போற்று ஏதாவது ஒரு விருதாவது பெற்றுவிடும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.