பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தலைவி. விஜய் இயக்கத்தில் கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார்கள். ஏப்ரல் 23ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது.
ஆனால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகமும் உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
தேர்தல் ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவி படம் வெளியாகும் ஏப்ரல் 23ம் தேதிக்கு முன்பாக நடந்தால் எந்தவிதமான சர்ச்சையும் எழ வாய்ப்பில்லை. ஆனால், அதற்குப் பிறகு தேர்தல் தேதி இருந்தால் எதிர்க்கட்சிகள் இதை சர்ச்சையாக்க வாய்ப்புள்ளது.
படம் வெளிவந்தால் அது அதிமுக கட்சிக்கு ஒரு மறைமுக பிரச்சாரமாகவும் அமையலாம். எனவே, மற்ற கட்சிகள் பட வெளியீட்டிற்குத் தடை கோரவும் செய்யலாம்.
இதற்கு முன்பும் தேர்தல் காலங்களில் இப்படி அரசியல் தலைவர்களின் படங்கள் வெளியான போது அவற்றிற்கு தடை விதித்த வரலாறும் இருப்பதால் தலைவி வெளியாவது திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.