மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
வருசம் 16 படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. கோயில் கட்டி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தர இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தன்னிடம் சுந்தர் சி காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகி விட்டதை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு. அந்தப் பதிவில் அவர், 'சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.