மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகர் முரளியின் மகனான அதர்வா, தற்போது குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது தம்பியான ஆகாஷூம் விரைவில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். தற்போது ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. அதையடுத்து அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார்.
இந்த ஆகாஷூக்கும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சினேகா பிரிட்டோ, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை தனது 18ஆவது வயதிலேயே ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.