மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்பதை இன்று வெளியான டீசருடன் அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாகவே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்தன. படத்தின் நாயகன் தனுஷ் கூட, “தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் என்னுடைய அனைத்து ரசிகர்களுக்குமாக 'ஜகமே தந்திரம்' படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்,” என்று கூறியிருந்தார்.
ஆனால், தனுஷ் ஆசையை நிராகரிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்றுவிட்டார். அத்தளத்தில் நேரடியாக வெளியாகும் முதல் பெரிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜகமே தந்திரம்' ஓடிடி தளத்தில் வெளியானால் அடுத்து வெளியாக உள்ள 'கர்ணன்' படத்திற்கு ஏதாவது சிக்கல் வரும் என்பதால்தான் தனுஷ் அப்படி தியேட்டர்காரர்களுக்கு ஆதரேவாக டுவீட் போட்டார் என்றும், 'ஜகமே தந்திரம்' ஓடிடி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே 'கர்ணன்' வெளியீட்டுத் தேதியை அறிவித்தார்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.