கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படம் ஏப்ரலில் ரிலீஸாகிறது என அறிவிக்கப்பட்டு விட்டது. கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகாமல் உள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் தனுஷ் நடித்துள்ள அட்ரங்கி ரே படம் வரும் ஆக-௬ல் ரிலீசாக இருக்கிறது என அறிவித்துள்ளார்கள்.
தனுஷை கடந்த 2013ல் வெளியான ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்ற இயக்குனர் ஆனந்த் எல்.ராய் அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தப்படத்தில் தனுஷை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமாரும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார் சாரா அலிகான் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.