சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படம தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தி மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் ஆனது. இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் தற்போது வெளியாகி முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்றுள்ளது.
படம் ரிலீஸாவதற்கு முன்பே இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து பேசுவதற்காகவும் லொக்கேசன் தேடுவதற்காகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளாராம் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் தான் இதிலும் ஹீரோவாக நடிக்கிறாராம். த்ரிஷ்யம் தெலுங்கு முதல் பாகத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார். தற்போது அதில் ஒரு சின்ன மாற்றமாக இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இயக்க போகிறாராம்.