23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ள மலையாள படம் சால்மன். 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்த படத்தை டால்ஸ் மற்றும் கட்டுமக்கான் படங்களை இயக்கிய ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது.
இப்படத்தில் விஜய் யேசுதாஸ் ஜோடியாக ஜொனிடா நடித்துள்ளார். இப்படம் ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது . ஸ்ரீஜித் இசை அமைத்துள்ளார், ராகுல் மற்றும் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஷலீல் கல்லூர் கூறியதாவது: சால்மன் என்பது ஒருவகை கடல் மீன். பிறக்கும்போதே அநாதையான இந்த மீன் அனைத்து தடைகளையும் சூழல்களையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் கடலிலேயே பயணிக்கிறது. அதுபோலவே இப்படத்தின் கதை வாழ்வின் கறுப்பு பக்கங்களை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை இப்படம் பேசுவதால் இப்படத்திற்கு சால்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது. என்றார்.