கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' |
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகா. தூத்துக்குடி என்ற படத்தில் குறும்பு சிரிப்பும் கிராமத்து அழகுமாய் அறிமுகமாகி புகழ்பெற்றதால் தூத்துக்குடி கார்த்திகா என்றே அழைக்கப்பட்டார். குறிப்பாக அந்தப்படத்தின் 'கருவாப்பையா' என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல 'பிறப்பு' படத்தில் அவர் ஆடிப்பாடிய, 'உலக அழகி நான் தான்' பாடலும் பிரபலமானது.
அதன்பிறகு சில படங்களில் நடித்த கார்த்திகா, திடீரென சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு உறவினர் ஒருவருடன் திருமணமாகி விட்டதாக கூட தகவல்கள் வெளியானது. இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் திடீரென தங்கையின் படிப்புக்காக மும்பை சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது. அப்போதும் கூட சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் ஏற்க முடியாத நிலையில் இருந்தேன். இடையில் சென்னை வந்தபோது, வெளியில் சென்ற இடங்களில் ரசிகர்கள் பலரும், “இத்தனை நாளாக “எங்கே சென்றீர்கள்..? நீங்கள் ஏன் மீண்டும் நடிக்க கூடாது ?” என தவறாமல் கேட்டனர்.
உடன் இருந்த உறவினர்கள் கூட, உன்னை எவ்வளவு பேர் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.. அதற்காகவது மீண்டும் நீ நடிக்கவேண்டும் என கூறினார்கள். அப்போதுதான் ரசிகர்களின் அன்பை இவ்வளவு நாள் நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் என புரிந்தது. அந்தசமயத்தில் தான் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இது தான் சரியான தருணம் என அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதில் ஒப்பந்தமான நேரம், அந்தப்படங்கள் மூலமாக இன்னும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. அதேபோல இங்கே தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனி வெள்ளித்திரையில் என்னை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம் என்கிறார் கார்த்திகா.