அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் தயாரித்து, இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள வசந்தபாலன், அதன் முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை ஒவ்வொருவராக சமூகவலைதளப் பக்கம் மூலம் அறிமுகப்படுத்தி வருகிறார் வசந்தபாலன். அதன்படி, இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.
துஷாரா ஏற்கனவே தமிழில் போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து வரும் சர்பேட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.